தமிழக ஆளுநருக்கு எதிராக மனு : ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்

DMK R. N. Ravi
By Irumporai Dec 08, 2022 06:23 AM GMT
Report

தமிழக ஆளுநரின் ஆர் என் ரவியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் செயல்பாடு

 தமிழகத்தின் ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் அவர் பதவியேற்ற நாளில் தொடங்கி கடும் விமர்சனத்தை ஆளும் திமுக அரசு வைத்து வருகின்றது.

மக்களவையில் நோட்டீஸ்

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் குறித்து மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

தமிழக ஆளுநருக்கு எதிராக மனு : ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ் | Governors Function Notice To Discuss In Lok Sabha

தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய 22க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தமிழக ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதாக குற்றசாட்டியுள்ளார்.

அதன்படி, நீட் விலக்கு, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உள்ளிட்ட 22 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை என தனது நோட்டீஸில் குற்றசாட்டியுள்ளார். ஆகவே ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து மக்களவையில் விவாதிக்கப்படலாம் என கருதப்படுகின்றது