தமிழக ஆளுநரின் டெல்லி பயணம் திடீர் ரத்து - நடந்தது என்ன?

Travel Delhi Governor of Tamil Nadu Cancel
By Nandhini Feb 07, 2022 05:42 AM GMT
Report

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாட்கள் பயணமாக டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியாயின. இந்த டெல்லி பயணத்தின் நீட் தொடர்பாக குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருடன் ஆலோசனை செய்ய இருந்ததாக தகவல் வெளியானது.

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற நாளை சட்டப்பேரவை கூட இருந்தது. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது டெல்லி பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் 6 மாதங்கள் கிடப்பில் போட்டுவிட்டு ஆளுநர் அரசுக்கே திருப்பி அனுப்பிவிட்டிருக்கிறார். இதற்கு அரசியல்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆளுநரை திரும்ப பெற வேண்டும் கொந்தளித்து வருகிறார்கள்.

இது குறித்து முக்கிய முடிவு எடுக்க தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், நாளை சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இதனிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாட்கள் பயணமாக டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியாயின. டெல்லி பயணத்தின் நீட் தொடர்பாக குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருடன் ஆலோசனை செய்ய இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற நாளை சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆளுநர் ரவி டெல்லி செல்லக் கூடும் என்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக ஆளுநரின் டெல்லி பயணம் திடீர் ரத்து - நடந்தது என்ன? | Governor Tamilnadu Travel Delhi Cancel