வள்ளி கும்மி நடனம் ஆடிய ஆளுநர் தமிழிசை - வைரலாகும் வீடியோ!

Smt Tamilisai Soundararajan Madurai
By Sumathi Jan 07, 2024 08:07 AM GMT
Report

ஆளுநர் தமிழிசை வள்ளி கும்மி நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஆளுநர் தமிழிசை

மதுரையில் சக்தி சங்கம் என்ற மகளிர் மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது அங்கு சிறுமிகள் வள்ளி கும்மி நடனம் ஆடினர்.

governor-tamilisai

அவர்களுடன் இணைந்து தமிழிசையும் நடனமாடினார். இதனை அங்கிருந்தவர்கள் உற்சாகப்படுத்தி வரவேற்றனர். தொடர்ந்து, நிகழ்ச்சி குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர்,

மீனை சைவ உணவாக்கனும்; எளிதில் விட்டுட முடியாது - விடாமல் வலியுறுத்தும் தமிழிசை செளந்தரராஜன்!

மீனை சைவ உணவாக்கனும்; எளிதில் விட்டுட முடியாது - விடாமல் வலியுறுத்தும் தமிழிசை செளந்தரராஜன்!

வள்ளி கும்மி நடனம்

“கேசவ சேவா கேந்திரம் சார்பில் மதுரையில் நடைபெற்ற “சக்தி சங்கமம்” மகளிர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பெண்கள் வாழ்க்கையில் வெற்றிபெற திறமையையும் தன்னம்பிக்கையும் வளர்த்துக் கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.

வள்ளி கும்மி நடனம் ஆடிய ஆளுநர் தமிழிசை - வைரலாகும் வீடியோ! | Governor Tamilisai Valli Kummi Dance Girls Madurai

மேலும் 33% மகளிர் இட ஒதுக்கீடு, முத்ரா வங்கி கடன் திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம், இலவச எரிவாயு திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்ற பல்வேறு மகளிர் நலத்திட்டங்கள் குறித்து தான் உரையாற்றினேன்” எனத் தெரிவித்துள்ளார்.