எங்களுக்குள் அண்ணன் தங்கை பிரச்சனை தான் : ஆளுநர் தமிழிசை விளக்கம்
எங்களுக்குள் இருப்பது அண்னன் தம்பி பிரச்சினைதான் விரைவில் முதலமைச்சரிடம் பேசி தீர்வு காண்பேன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
ரங்கசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரியில் இன்று அப்துல்கலாம் செயற்கைகோள் திட்டம் 2023-ஐ புதுச்சேரி துணைநிலை ஆளுனர் தமிழிசை துவங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய , புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.
அண்ணன் தங்கை பிரச்சினை
புதுச்சேரியில் எல்லா திட்டங்களையும் நிறைவேற்ற காலதாமதமாகிறது. எல்லாவற்றிற்கும் மத்திய அரசை நாடியே இருக்க என குற்றம் சாட்டினார் .இதற்கு பதிலளித்துள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

எங்களுக்குள் இருப்பது அண்ணன் , தங்கை பிரச்சனை தான் தான். நான் விரைவில் முதல்வர் ரங்கசாமி அண்ணனிடம் நேரடியாக பேசி என்ன பிரச்சனையோ அதனை தீர்த்து வைப்பேன். என கூறினார்.
யாரையும் மன வருத்தமடைய வைத்துவிட கூடாது என்றுதான் நான் செயல்படுவேன் என்றும் தமிழிசை கூறினார்.