கோவை கார் வெடிப்பு சம்பவம் .. ஆளுநர் கருத்து அபத்தமானவை - திமுக, கூட்டணி கட்சிகள் அறிக்கை

M K Stalin DMK R. N. Ravi
By Irumporai Oct 30, 2022 05:30 AM GMT
Report

கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பேசினார்.

ஆளுநர் சர்ச்சை பேச்சு

அப்போது இந்த சம்பவம் குறித்து பேசிய ஆர்.என் ரவி கோவை குண்டு வெடிப்பு சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல் என்று கூறிய ஆளுநர் இந்த வழக்கு தாமதமாக என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்துள்ளதாக கூறினார்.

கோவை கார் வெடிப்பு சம்பவம் .. ஆளுநர் கருத்து அபத்தமானவை - திமுக, கூட்டணி கட்சிகள் அறிக்கை | Governor Should Avoid Speaking Irresponsibly Dmk

ஆளுநரின் இந்த பேச்சிற்கு திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் : ஆளுநர் பதவியில் இருந்துகொண்டு பொறுப்பற்ற வகையில் ஆர்.என் .ரவி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

ஆளுநர் பதவி விலகவேண்டும்

ஆளுநர் ரவி பதவி விலகிவிட்டு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசட்டும். தமிழகத்தில் ஆளுநர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்ச்சி செய்கின்றாரா? பாஜக கட்சியில் பெரிய பதவியினை எதிர்பார்த்து கட்சி தலைமையினை மகிழ்விக்க கவர்னர் விரும்பினால் அவர் பதவி விலக வேண்டும்

ஆளுநர் கூறும் கருத்துக்களுக்கு எதிராக பலர் கூறும் விமர்சனங்களை அவர் ஏற்றதாக தெரியவில்லை

திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம்

ஆகவே வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தும் எண்ணத்தோடு ஆளுநர் பேசுவதாக திமுகவின் டி.ஆர். பாலு, தமிழக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தி.க. ம.ம.க.ஐயூ எம் எல், கொ.மதே.க., த.வா.க உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.