ஆன்லைன் ரம்மி தடை மசோதா..! விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம்

M. K. Stalin Tamil nadu R. N. Ravi Governor of Tamil Nadu Government Of India
By Thahir 1 வாரம் முன்

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார்.

கடிதம் எழுதிய ஆளுநர் 

கடந்த அக்டோபர் 19ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார் என்கிற குற்றசாட்டும் அவர் மீது இருந்து வருகிறது.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா..! விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் | Governor S Letter To Tamil Nadu Government

சட்ட சபையில் நிறைவேற்றபட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க 6 வார கால அவகாசம் உண்டு அது விரைவில் முடிவடைய உள்ள நிலையில், தற்போது, ஆளுநர் ரவி ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விளக்கமானது இன்றைக்கும் அளிக்கப்படும் என தமிழக சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.