தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 10.30 மணியளவில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
டெல்லி செல்லும் ஆளுநர்
தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து பேசி வருவதாக திமுக கூட்டணி கட்சியினர் குற்றச்சாட்டையும், கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் திமுக மனு கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்ல உள்ளார்.
நாளை இரவு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்தடைய உள்ளதாக கூறப்படுகிறது.
தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்வதாக ஆளுநர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.