ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் - பட்ஜெட் தாக்கலின்போது செல்ல என்ன காரணம்?
ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆளுநர் ரவி
தமிழக சட்டபேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது ஆளுநர் ரவி அனைவருக்கும் வணக்கம் சொல்லி,
சட்டப்பேரவையில் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக அவர் வைத்த கோரிக்கை நிறைவேறாததை குறிப்பிட்டார்.
டெல்லி பயணம்
பின் தமிழக அரசின் உரையில் சில வரிகள் உண்மைக்கு முரணாக இருப்பதாக கூறி முழுதாக படிக்காமல் புறக்கணித்துவிட்டு சபை முடியும் முன் அவர் வெளிநடப்பு செய்தது பெரும் சர்ச்சையை எற்படுத்தியது. இதனையடுத்து, இன்று தமிழக அரசின் 2024-2025 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளர். இந்த 4 நாட்கள் பயணத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.