காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா? முதல்வருக்கு ஆளுநர் ரவி கேள்வி
காந்தி திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களால் கேலி செய்யப்பட்டார் என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.
காந்தி நினைவு தினம்
காந்தியின் நினைவு நாளான இன்று(30.01.2025) நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் உருவப்படத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஆர்.என்.ரவி
இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என் ரவி இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956 -ஆம் ஆண்டு கே. காமராஜர் அவர்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச்சின்னமாகும்.
காந்தி நினைவு நிகழ்வுகளை - அவரது பிறந்தநாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை - நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா? தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதலமைச்சரிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள் பிடிவாதமான மறுப்பை சந்தித்தன.
"காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956 -ஆம் ஆண்டு கே. காமராஜர் அவர்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச்சின்னமாகும். காந்தி நினைவு நிகழ்வுகளை - அவரது பிறந்தநாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை - நகர அருங்காட்சியகத்தின் ஒரு…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 30, 2025
காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?" என கூறியுள்ளார்.