திருக்குறள் ஆன்மிகம் கற்பிக்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி
திருக்குறளை ஒரு நிலர் அரசியலுக்காக பயன்படுத்தி வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திருக்குறள் மாநாடு 2022 நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது, ஏற்கனவே உள்ள மொழிபெயர்ப்புகள் திருக்குறளின் உண்மை நிலையை பேசவில்லை. அதனால் திருக்குறளை அதன் வடிவம் மாறாமல் முழுமையாக மொழிபெயர்க்க வேண்டும்.
திருக்குறள் ஆன்மிகத்தை கூறுகிறது
திருக்குறள் இந்தியாவின் அடையாளம். அதனை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர். ஆன்மிகம், நீதி சாஸ்திரம் குறித்து திருக்குறள் பேசுகிறது. திருக்குறள் வாழ்க்கை நெறிகளை கற்பிப்பதை மட்டுமே கூறுகின்றனர். ஆனால் அது கற்பிக்கும் ஆன்மிகம் பற்றி யாரும் பேசவில்லை.
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் வேண்டுமென்றே இதனை மாற்றி மொழிபெயர்த்துள்ளார். ஆதிபகவன் என்றால் முதன்மை கடவுள் என நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் ஜி.யு.போப் அதை மாற்றி எழுதினார் இவ்வாறு கூறினார்.