ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி வந்துள்ளது : ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஒரு தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லையென்றால் நிராகரிப்பதாக பொருள் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ரவி
இந்திய குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் சென்னை ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் ஆளுநரின் ' எண்ணித் துணிக' நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டுள்ள மாணவர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடி வருகிறார். சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாடுகளில் இருந்து திட்டங்கள் தீட்டப்பட்டு இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் பல செயல்கள் நடைபெறுவதாக கூறினார்.

வெளிநாட்டு நிதி
அதேபோல் கூடங்குளம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் போது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் வருத்தமானது. ஆனால் அந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் நாட்டின் மொத்த காப்பர் உற்பத்தியில் 40 சதவீதம் அளவுக்கு பூர்த்தி செய்யப்பட்டு வந்தது எவ்வளவு முக்கியத்துவமானது என்று தெரியும்.
ஆளுநர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அதற்கு நிராகரிப்பதாக பொருள். அரசியல் அமைப்பின் படி அரசியல் அமைப்பை பாதுக்காப்பதே ஆளுநரின் கடமை. நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டு நிதி உதவிகள் இருந்துள்ளன. ஸ்டெர்லைட் நாட்டின் 40% காப்பர் தேவையை பூர்த்தி செய்தது. இதனை வெளிநாட்டு நிதிகள் மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர்