சட்டசபையில் இருந்து வெளியேறியது இதனால்தான் - ஆளுநர் ஆர்.எம்.ரவி விளக்கம்!

Tamil nadu DMK R. N. Ravi
By Sumathi Feb 12, 2024 09:45 AM GMT
Report

சட்டசபையில் இருந்து வெளியேறியது குறித்து ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.

வெளியேறிய ஆளுநர் 

தமிழ்நாடு அரசின் இந்தாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. அதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரையானது ஆளுநரிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது.

governor rn ravi

ஆனால், தேசிய கீதத்தை தொடக்கத்திலும் இறுதியிலும் பாட வேண்டும் என்ற தனது கோரிக்கையை நிராகரிக்கப்பட்டதாக வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய் பாரத் என கூறி அவர் உரையை படிக்காமல் அமர்ந்தார். அதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்தார்.

இருப்பினும், தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறினார். இந்நிலையில், இதுகுறித்து ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வரைவு கவர்னரின் உரை 9.2.2024 அன்று ராஜ்பவனில் அரசிடமிருந்து பெறப்பட்டது.

மீண்டுமா.. தமிழ்நாடு அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி - சட்டப்பேரவையில் பரபரப்பு!

மீண்டுமா.. தமிழ்நாடு அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி - சட்டப்பேரவையில் பரபரப்பு!

விளக்கம்

அந்த உரையில் உண்மைக்கு புறம்பான தவறான உரிமைகோரல்களுடன் பல பத்திகள் இருந்தன. உரையின் தொடக்கம், முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என கடந்த காலங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநரின் ஆலோசனைகளை புறக்கணிக்க வேண்டும் என அரசு தீர்மானித்துள்ளது.

சபாநாயகர் தனது செயல்பாடுகளால் பேரவை, மற்றும் சபாநாயகர் பதவிக்கான கண்ணியத்தை குறைத்துள்ளார். உரை வாசித்து முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்படும் என்று எழுந்து நின்றபோது தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு பதிலாக ஆளுநரை சபாநாயகர் வசை பாடினார்.

அத்துடன் கோட்சேவுடன் ஆளுநரை தொடர்புபடுத்தி அவதூறாக பேசினார். கோட்சேவை பின்பற்றக் கூடியவர் என்று அவர் பேசினார். சபாநாயகர் அவதூறாக பேசியதால் சபையின் கவுரவம் கருதி ஆளுநர் அந்த அவையிலிருந்து வெளியேறினார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.