ஆளுநர் என்ன ஆண்டவரா ? - கொந்தளித்த அமைச்சர் சேகர்பாபு

P. K. Sekar Babu
By Irumporai May 07, 2023 03:34 AM GMT
Report

ஆளுநர் என்ன ஆண்டவரா என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

 சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு

கோயில் நிலங்கள் மீட்பு

கோயில் நிலங்கள் கண்டறியப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் சேகர்பாபு ,குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மீட்கப்பட்ட சில இடங்கள் பாஜவினர் ஆக்கிரமிப்பில் வைத்திருந்திருந்தனர்.

அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டதற்கு ஆளுநர் நன்றி சொல்ல வேண்டுமென்றால், முதலில் தமிழக அரசுக்கு நன்றியை சொல்ல வேண்டுமே தவிர, இது போன்ற குறைகள் சொல்வதை அவர் தவிர்க்க வேண்டும் என கூறினார்.

ஆளுநர் என்ன ஆண்டவரா ? - கொந்தளித்த அமைச்சர் சேகர்பாபு | Governor Rn Ravi Lord Question Minister Sekar Babu

சட்டம் பொதுவானது

குழந்தை திருமணம் குறித்து 4 புகார்கள் பெறப்பட்டன அந்த புகார்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு மட்டுமல்லாமல் இரட்டை விரல் பரிசோதனை நடைபெறவில்லை. சட்டமீறல், விதிமீறல் நடந்தால் அது சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அந்த சட்டம் அவர்கள் மீது பாய கூடாதா? சிதம்பர தீட்சிதர்கள் என்றால் அவர்களுக்கென்று ஏதாவது ஆளுநர் சட்டம் வகுத்து தந்திருக்கின்றாரா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது.

  ஆளுநர் ஆண்டவரா

விதிமீறல்கள், சட்டமீறல்கள் எங்கிருந்தாலும் அதில் உடனடியாக சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கக்கூடிய தமிழ்நாடு முதல்வர் நடத்திக் கொண்டிருக்கின்றார். ஆளுநர் என்றால் ஆண்டவரா? தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பது தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி. அண்ணா சொன்னது போல் ஆட்டுக்கு தாடி தேவையில்லை, தமிழ்நாட்டுக்கும் ஒட்டுமொத்த ஒன்றியத்துக்கும் ஆளுநரும் தேவை இல்லை என்பதுதான் திமுகவின் கொள்கை.

ஆகவே நியமனப் பதவியில் இருக்கும் ஆளுநர் கூறுவதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவர் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்திற்காக இப்படிப்பட்ட இல்லாத குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கின்றார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.