ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் - முக்கிய காரணம்!
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொள்ளவில்லை.
ஆளுநர் ஆர்.என்.ரவி
கடந்த நவம்பர் 16ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.
தொடர்ந்து, நேற்று நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி பயணம்
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று மாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நாளை ஆர்.என்.ரவி மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை தமிழக அரசு மீண்டும் நிறைவேற்றி உள்ள நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.