சட்டப்பேரவையில் தான் பேசியது என்ன..? வீடியோ வெளியிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தான் பேசிய உரையின் வீடியோவை ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் மாளிகையின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
வெளியேறிய ஆளுநர்
தமிழ்நாடு அரசின் இந்தாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. அதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரையானது ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், தேசிய கீதத்தை தொடக்கத்திலும் இறுதியிலும் பாட வேண்டும் என்ற தனது கோரிக்கையை நிராகரிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு போதிய மரியாதை தரப்படவில்லை என்று ஆளுநர் குறிப்பிட்டார். மேலும், ஆளுநர் உரையில் தகவல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன.
வீடியோ வெளியீடு
அவற்றை வாசிப்பது அரசியல் சாசனத்தை அவமதிப்பதாக அமையும் என்று கூறிவிட்டு, வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய் பாரத் என கூறி அவர் உரையை படிக்காமல் அமர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்தார். இருப்பினும், தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே பேரவையிலிருந்து ஆளுநர் ரவி வெளியேறினார்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தான் பேசிய உரையின் வீடியோவை ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் மாளிகையின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிகு ஆளுநர் இன்று ஆற்றிய உரை.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) February 12, 2024
Hon'ble Governor's address in the Tamil Nadu Legislative Assembly today. @rashtrapatibhvn @PMOIndia @HMOIndia @MIB_India @PIB_India @pibchennai @DDNewslive @DDTamilNews @airnewsalerts @airnews_Chennai @PBNS_India… pic.twitter.com/PBWoo63B2y