டிஜிட்டல் மூலம் ஊழலுக்கு தீர்வு.. இந்தியாவை மாற்றியது பிரதமர் மோடி தான் - ஆளுநர் ஆர்.என்.ரவி!

Tamil nadu R. N. Ravi Narendra Modi India
By Vinothini Aug 27, 2023 03:32 AM GMT
Report

இந்தியாவின் மாற்றத்திற்கு காரணம் பிரதமர் மோடி தான் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

கருத்தரங்கு

திருச்சியில் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் தலைமை பண்பு குறித்த ஒரு நாள் கருத்தரங்கு நேற்று காலை நடந்தது. ஐ.ஐ.எம். இயக்குனர் பவன்குமார்சிங் தலைமை தாங்கினார், இதில் தமிழக கவர்னர் ஆா்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

governor-ravi-spoke-about-pm-modi

இதில் கலந்துகொண்டு ஆளுநர் உரையாற்றினார். அதில், "தற்போதைய போட்டி நிறைந்த உலகில் தலைமை பண்புடன் சிறந்து விளங்குவதற்கு புதிய திறன்களை இளைஞர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

ஆளுநர் உரை

இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், "சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். அத்தகைய ஒரு தலைவர் தான் நமது பிரதமர். இந்தியாவில் ஊழல் ஒரு பிரச்சினையாக இருந்தது. பயனாளிகளுக்கு ஒரு ரூபாய் அரசு ஒதுக்கினால், பயனாளிகளுக்கு 15 பைசா தான் சென்றடைகிறது. மீதம் 85 பைசா ஊழல் செய்யப்பட்டு விடுகிறது.

governor-ravi-spoke-about-pm-modi

இதை கருத்தில் கொண்டு தான் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் உருவாக்கினார். இதற்காக ஜன்தன் வங்கி கணக்குகளை தொடங்க வைத்தார். இப்போது நாட்டில் 5 மில்லியன் ஜன் தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 56 சதவீதம் பெண்கள் ஆவர். தற்போது நலத்திட்டங்கள் அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக சென்றுவிடுகிறது. இடையில் எவராலும் சுரண்ட முடியாத நிலையை பிரதமர் ஏற்படுத்தியுள்ளார். விவசாயிகளுக்கும் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவராக மோடி திகழ்கிறார்" என்று கூறியுள்ளார்.