காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராமர் இணைத்துள்ளார் : ஆளுநர் ஆர்.என்.ரவி

BJP R. N. Ravi
By Irumporai Jan 11, 2023 05:22 AM GMT
Report

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் ஆராதனை விழா இன்று நடைபெறுகிறது. அதில் காலை முதல் பல்வேறு இசைக்கலைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

தியாகராஜர் ஆரதனை விழா

ஆராதனை விழாவில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “இந்தியாவின் கலாச்சார அடையாளம் ராமர். காஷ்மிர் முதல் கன்னியாக்குமரி வரை ராமர் ஆன்மீகத்தால் இணைத்துள்ளார்.

சனாதனம் தோன்றியது தமிழகத்தில்

இந்திய நாடு ஆட்சியாளர்களால் உருவாக்கப்படவில்லை. அது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது. 

சனாதான தர்மத்தால் மட்டுமே இது சாத்தியமானது. சனாதான தர்மம் என்பது தெற்கிலிருந்துதான் தொடங்கியது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து தொடங்கியது  என கூறினார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராமர் இணைத்துள்ளார் : ஆளுநர் ஆர்.என்.ரவி | Governor Ravi Said Sanatana Dharma

தமிழகம் , சனாதன கருத்தினால் சர்ச்சையாகியுள்ள ஆளுநரின் கருத்து தற்போது மீண்டும் சனாதனம் குறித்து பேசியுள்ளது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.