தமிழகத்திற்கு 1 கோடி நிதி வழங்கிய ஆளுநர்
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் பயங்கர பாதிப்பையும் உயிரிழப்பையும் அதிகரித்து வருகிறது.
தற்போது, தமிழகத்தில் தினமும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களை கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அந்த வகையில் முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு தாரளமான நிதி வழங்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள், சமூக அமைப்புகள், பெரும்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பலவேறு திரைப்பிரபலங்களும் பொதுமக்களும் தொழில்முனைவோரும் நிதி வழங்கி வருகின்றனர்.
தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார்.
இன்று ஆளுநர் மாளிகை வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஆளுநர் பன்வாரிலால் புரொகித் ரூ.1 கோடியை வழங்கினார்.