ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானம் நிறைவேற்றம் : ஆளுநர் ரவிக்கு செக் வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஆளுநருக்கு எதிராக தீர்மானம்
அதன்படி சபாநாயகர் அப்பாவு தீர்மானத்தை வசித்தார். அப்போது ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானத்தை கொண்டுவந்தார் அவை முன்னவர் துரைமுருகன் அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
governor-prime-minister-mkstalin-will-file-today
தீர்மானம் நிறைவேற்றம்
இந்த நிலையில் தமிழக சட்டசபை நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும், நிறைவேறும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர மத்திய அரசு, ஜனாதிபதி கால நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் கருத்துக்கள் பேரவையின் மாண்பை குறைக்கும் வகையில் உள்ளதாகவும் அது மாநில நிர்வாகத்துக்கு ஏற்புடையதல்ல அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது