பாதுகாப்புத்துறை அமைச்சருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு
Delhi
rajnathsingh
RNRavi
GovernorRNRavi
By Irumporai
டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் உடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு. மூன்று நாள் பயணமாக இன்று டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜிநாத் சிங்கை சந்தித்து தற்போது ஆலோசித்து வருகிறார்.

கிட்டத்தட்ட 15 நிபிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நடந்து வருகிறது. இந்த சந்திப்பில் தமிழகம் சார்ந்த விஷயங்கள் குறித்தும், இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதன்பின் நாளை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை, தமிழக ஆளுநர் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.