ஆன்லைன் ரம்மியால் இளைஞர் உயிரிழப்பு...ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி

Anbumani Ramadoss R. N. Ravi Governor of Tamil Nadu
By Thahir Mar 04, 2023 11:41 AM GMT
Report

15 பேரின் தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இளைஞர் தற்கொலை 

சென்னை தாம்பரத்தை சேர்ந்த மருந்து நிறுவன பிரதிநிதி வினோத்குமார். இவர் மாடம்பாக்கம் கணபதி காலனியில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் இவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி உள்ளார். வினோத்குமார் பல லோன் ஆப்களில் 20 லட்சம் வரை கடன் வாங்கி விளையாடி வந்துள்ளார்.

கடன் கொடுத்த லோன் ஆப்கள் தரப்பில் வந்த நெருக்கடி மற்றும் பணத்தை இழந்த வேதனையில் வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ‘ஆன்லைன் ரம்மியால் தனது அழகான வாழ்க்கையை தொலைத்து விட்டதாக வினோத்குமார் கடிதத்தில் எழுதியுள்ளார். தன்னை நம்பி கடன் கொடுத்தவர்கள் மன்னிக்கும் படியும் கேட்டு கடிதத்தில் உருக்கத்துடன் எழுதியுள்ளார். மேலும் தயவு செய்து ஆன்லைன் ரம்மி தடை செய்யுங்கள். எனது மரணமே கடைசியாக இருக்கட்டும் என்று அதில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் 

இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அக்டோபர் 18-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, இன்றுடன் 138 நாட்களாகியும் இன்னும் ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை.

governor-is-responsible-for-online-rummy-death

அதன்பிறகு நடந்த 15 பேரின் தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.இரவி தான் பொறுப்பேற்க வேண்டும்! என பதிவிட்டுள்ளார்.