எந்த நன்மையும் செய்யக்கூடாது என்பதற்காகவே ஆளுநர் உள்ளார் : கனிமொழி எம்பி விமர்சனம்
மாநில அரசுகள் மக்களுக்கு எந்த நன்மையும் செய்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே ஆளுநர்கள் நியமிக்கப்படுவதாக கனிமொழி எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.
கனிமொழி எம்பி
சென்னை திண்டிவனத்தில் கனிமொழி எம்பி அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.பாஜகாவால் ஆட்சியை பிடிக்க முடியாத காரணத்தினால் மாநிலங்களில் ஆளுநர் மூலமாக ஆட்சியை பிடிக்க முயற்சி நடப்பதாகவும் கூறினார்.
ஒப்புதல் தர மறுக்கும் ஆளுநர்
மேலும் , தமிழகத்தில் ஆளுநர் ஆனலைன் ரம்மி விளையாட்டினை தடை செய்யும் சட்டத்திற்கு ஒப்புதல் தர மறுப்பதாகவும் . இந்த விவகாரத்தில் சட்டத்துறை அமைச்சர் ஆளுநரிடம் பல முறை விளக்கமளித்தும் புரிந்து கொள்ளவில்லை .
ஆகவே மாநில அரசுகள் மக்களுக்கு எந்த நன்மையும் செய்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே ஆளுநர்கள் நியமிக்கப்படுவதாக கனிமொழி விமர்சனம் கூறினார்.