ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லை - சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு..!

EPS Attack Car Governor Aiadmk
By Thahir Apr 20, 2022 06:42 AM GMT
Report

ஆளுநர் சென்ற வாகனம் மீது கருப்பு கொடி வீசப்பட்டதற்கு எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றிருந்தார். அப்போது மன்னம்பந்தல் என்ற இடத்தில் சில அமைப்புகள் மற்றும் ஒரு சில கட்சியினர் ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து அவர்கள் ஆளுநர் வாகனம் சென்ற வாகனங்கள் மீது கருப்பு கொடி வீசி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்துள்ளது.இதையடுத்து தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் கவன எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் பேசிய போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் சென்ற வாகனம் மீது கருப்பு கொடி.கற்கள் மற்றும் கம்புகள் வீசப்பட்டுள்ளது.இது வன்மையாக கண்டிக்க தக்கது என்றார்.

ஆர்பாட்டக்கார்களை அப்புறப்படுத்தாமல் காவல்துறையே ஆர்பாட்டகாரர்களுக்கு பாதுகாப்பு அளித்தது மிகவும் வருந்ததக்கது,கண்டனத்துக்குரியது,கண்டிக்கத்தக்கது. காவல்துறையின் இந்த நடவடிக்கை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி ஆளுநர் சுற்றுப்பயண விவரங்களை தெரிவித்திருந்தும் காவல்துறை தகுந்த முன்னேற்பாடுகளை செய்யவில்லை.

ஆளுநர் மீதான இந்த தாக்குதல் தமிழக காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளி. திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் காவல்துறை செயலிழந்துள்ளது.உளவுத்துறை தோல்வியடைந்துள்ளது.

தமிழகத்தில் ஆளுநருக்குகே பாதுகாப்பு இல்லாத போது சாமானிய மக்களின் பாதுக்காப்பு கேள்விக்குறியாகியுள்ளது. தமிழக காவல்துறை தமிழக அரசின் கைபாவையாக உள்ளது என்று குற்றம்சாட்டினார்.