நேதாஜிக்கு பதிலாக நடிகர் ஒருவரின் புகைப்படத்தை திறந்து வைத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

india anniversary netaji subhas
By Jon Jan 25, 2021 12:49 PM GMT
Report

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியின் சுபாஷ் 125வது பிறந்தநாள் கடந்த 23-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சுபாஷ் சந்திர போஸின் உருவப்படத்தை ஜனாதிபதி மாளிகையில் திறந்து வைத்தார்.

ஆனால் அந்தப் புகைப்படம் நேதாஜியின் உண்மையான புகைப்படம் இல்லை எனப் பலரும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நேதாஜி பற்றிய திரைப்படம் ஒன்றில் அவருடைய கதாபாத்திரத்தில் நடித்த பிரசென்ஜித் சாட்டர்ஜி என்பது தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் திறக்கப்படும் இந்தியாவின் முக்கியமான தலைவர் ஒருவரின் புகைப்படத்தை திறப்பதில் இவ்வளவு அலட்சியமாக இருப்பதா என நெட்டிசன்கள் பலரும் கேள்வியெழுப்பி உள்ளனர்.