'தொழிலாளர் விரோத சட்டத்தை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

ADMK Edappadi K. Palaniswami
By Irumporai Apr 22, 2023 11:05 AM GMT
Report

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை, அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என எடப்பாடிபழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

12 மணிநேரம் வேலை

தமிழகத்தில் 12 மணிநேரம் வேலை என்ற மசோதவை தமிழக அரசு சட்டபேரவையில் நிறைவேற்றியது. இந்த புதிய மசோதாவிற்கு எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சட்ட மசோதாவிற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அரசு கொண்டுவந்துள்ள இந்த 12 மணிநேர சட்ட மசோதா தொழிலாளர்களுக்கு எதிரானது, அவர்களின் வயிற்றில் அடிக்கும் இந்த சட்ட மசோதாவை அரசு, உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

எடப்பாடி அறிக்கை

மேலும் தனது அறிக்கையில் : தி.மு.க. அரசு மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதை கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது என்றும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தொழிலாளர் விரோத சட்டத்தை உடனடியாக அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக தொழிலாளர்களின் நலன் காக்க அ.தி.மு.க. எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என எச்சரிப்பதாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.