தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்காது -மக்களே வெளியேற்றுவார்கள் : செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்

Tamil nadu DMK TVK
By Vinoja Nov 15, 2026 03:07 PM GMT
Report

தவெக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்றும், மக்களே ஆட்சியை வெளியேற்றும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெகவுக்கு வாக்களித்த பெண்களே தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்து வருவதாகக் கூறினார்.

தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்காது -மக்களே வெளியேற்றுவார்கள் : செல்லூர் ராஜூ கடும் விமர்சனம் | Government Will Not Last Five Years Sellur Raju

மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும், அரசின் பல்வேறு துறைகளில் வசூல் மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டிய அவர், ரேஷன் கடைகளில் கூட ஒரு எம்.எல்.ஏ. ரூ.5,000 மாமூல் கேட்பதாகப் புகார் வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

எனவே, மத்திய அரசு பாரபட்சமின்றி இந்த ஆட்சியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆளுங்கட்சிக்குள் அமைச்சர் பதவி கிடைக்காததால் சுமார் 30 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் அவர்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்கக்கூடும் என்ற அச்சத்திலேயே கூட்டம் நடத்தப்பட்டதாகவும் விமர்சித்தார்.

மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தவறு செய்த அமைச்சர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய ஆட்சியில் அத்தகைய கட்டுப்பாடும் அச்சமும் இல்லை எனக் குற்றம்சாட்டினார்.

மக்கள் கடும் மனவேதனையில் இருப்பதாகவும், இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீடிக்காது என்றும், இறுதியில் மக்களே ஆட்சியை அகற்றுவார்கள் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.