அரசு வாகனங்கள் மீது குத்தாட்டம் போட்டவர்களை கொத்தாக அள்ளிய காவல்துறை
தேவர் ஜெயந்தியின் போது காவல்துறை வாகனத்தின் மீது ஏறி ஆட்டம் போட்ட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இராமநாதபுரம் பசும்பொண்ணில் கடந்த வெள்ளிக்கிழமை தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்திலையில் குரு பூஜைக்கு வந்த திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் வானத்தை மறித்த சில பேர் வாகனத்தின் மீது ஏறி ஆட்டம் போட்டனர் இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகபெருமாள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து அரசு வாகனத்தின் மீது ஏறி ஆட்டம் போட்டது மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய முடியாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் 13 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.