அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீதம் வரை சம்பள உயர்வு - அமைச்சர் சிவசங்கர் பேட்டி..!
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 5 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
4ம் கட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நேற்று சென்னை குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடந்தது இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் தலைமை தாங்கினார்.
போக்குவரத்து செயலாளர் கோபால்,நிதித்துறை கூடுதல் செயலாளர் சுந்தர் தயாளன்,ஊதிய பேச்சுவார்த்தை கன்வீனரும்,
மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனருமான அன்பு ஆபிரகாம் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இந்த பேச்சுவார்த்தையில் 65 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது போக்குவரத்து ஊழியர் தொழிற்சங்கங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அதிக பட்சமாக 5 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
நீண்ட காலமாக பதவி உயர்விற்காக காத்திருப்போருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.