அதிகரிக்கும் போர் பதற்றம் : கீவ்-இல் இருந்து இந்தியர்கள் எப்படியாவது இன்றே வெளியேறுங்கள் என அறிவுறுத்தல்

russiaukraineconflict ordertoindiansinkyiv indianstoleavekyivasap
By Swetha Subash Mar 01, 2022 07:04 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

கீவ்-இல் இருந்து இந்தியர்கள் இன்றே வெளியே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

அதிகரிக்கும் போர் பதற்றம் : கீவ்-இல் இருந்து இந்தியர்கள் எப்படியாவது இன்றே வெளியேறுங்கள் என அறிவுறுத்தல் | Government To Indians To Leave Kyiv Soon

உக்ரைனின் முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவ வீரர்கள் பயங்கரமாக சண்டையிட்டு வருகிறார்கள். உக்ரைன் - ரஷ்யா போரால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் ரஷ்யா- உக்ரைன் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை நேற்று பெலாரஸில் நடந்தது.

நேற்று பெலாரஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறப்படும் நிலையில் உக்ரைன் மீது ரஷ்ய படைகளின் தாக்க்குதல் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கீவ் நகரில் உள்ள இந்தியர்கள் உடனடியாக ரயில் உள்ளிட வாகனங்கள் மூலம் இன்றே கீவ்-ஐ விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் இந்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ஆப்ரேஷன் கங்கா மூலம் ருமேனியா, ஹங்கேரி, போலாந்து எல்லை வழியாக இந்தியர்களை மீட்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில் கீவ்-இல் உள்ள இந்தியர்களுக்கு இந்த அவசர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.