திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா: கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் அதிகாரிகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்துவதுடன் பொது சுகாதாரத் துறையும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்படி துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.
தொற்றுநோய் கண்டறியப்படும் பகுதிகளில் கண்காணிப்பு பணி கிருமிநாசினி தெளித்தல் பகுதியை சுத்தம் செய்யும் பணி மருத்துவ முகாம் ஆகிய பணிகளை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு ஒரு வீட்டிலோ அல்லது ஒரு தெருவில் மூன்று பேருக்கும் ஏற்ப பாதிக்கப்பட்டோர் இருந்தால் அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்பு ஏற்படுத்தி 14 நாட்கள் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று சீலப்பாடி மூவேந்தர் நகரில் ஒரே வீட்டில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பணிகள் சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் கூறுகையில் இன்றைய காலகட்டத்தில் கொரோனா தொற்று பன்மடங்கு பெருக்கும் அடிப்படையில் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.
முகக் கவசம், சமூக இடைவெளி பின்பற்றுதல் சானிடைசர் பயன்படுத்துதல் என்ற முக்கிய பணியை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டால் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என தெரிவித்தார்.
திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சீனிவாசன், மருத்துவர் சிவசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன், ஊராட்சி செயலர் சுதாகரன் மருத்துவப் பணிகளை மேற்கொண்டனர்.