அரசு உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்: கமல்ஹாசன் வேண்டுகோள்!

corona goverment kamalhaasan
By Irumporai May 31, 2021 10:21 AM GMT
Report

கடந்த சில தினங்களாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அரசுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை விடுத்து வருகிறார் .

இந்த நிலையில் இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் மருத்துவமனைகளில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக கூறியுள்ள கமல்ஹாசன்.

இறப்பு சான்றிதழ் கிடைத்தால்தான் காப்பீடுகள் உள்ளிட்ட நிவாரணங்களை பெற முடியும்.

ஆகவே,அரசுஇதனைஉடனடியாககவனிக்கவேண்டுமென்றும்.இறந்தவர்களின் விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென கூறியுள்ளார்.