மத்திய பல்கலை கழக பொது நுழைவு தேர்வை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் : ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

admk ops dmk tngoverment stopcentraluniversityexam
By Irumporai Apr 04, 2022 05:06 AM GMT
Report

மத்திய பல்கலை கழகங்களில் நடக்க உள்ள பொது நுழைவு தேர்வை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

நாட்டிலுள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களிலும் பொது நுழைவு தேர்வு மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என பல்கலைக்கழக மானிய குழு கூறியுள்ளது. ஆகவே மத்திய பல்கலைக்கழக நுழைவு தேர்வை அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

இனி இந்த நுழைவு தேர்வு மூலமாகவே, நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பின் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில், மத்திய பல்கலை கழகங்களில் நடக்க உள்ள பொது நுழைவு தேர்வை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இந்த நுழைவுத்தேர்வில் 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களுக்கு எந்த மதிப்பும் இருக்காது. அவர்களது மத்திய பல்கலைக்கழக நுழைவு தேர்வு மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு சேர்க்கை நடைபெறும்.

இதனால், மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் மேலும், ஏற்று கொள்ளப்பட்ட மதிப்பீட்டு முறைகளில் பன்முகத்தன்மை உள்ள சூழலில், மாணவர்கள் சேர்க்கைக்கு 12ம் வகுப்பு வாரிய மதிப்பெண்கள் பயன்படுத்துவதற்கு அரசு விரும்பவில்லை.

ஆகவே மாணவர்களுக்கு நியாயமில்லாத இந்த நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.