அரசு ஊழியர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி வெளியிட உள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு

announcement cm happy
By Jon Feb 05, 2021 04:18 AM GMT
Report

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் பல்வேறு தரப்பினரையும் ஈர்க்கும் விதமாக புதிய அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தமிழக அரசுப்பணியில் உள்ள ஊழியர்கள் சொந்த வீடு கட்ட அல்லது வாங்க, அரசு சார்பில் வழங்கப்படும் முன்பணம் ரூ. 25 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இதே போல் பல்வேறு கோரிக்கைகளை எதிர்த்து போராடிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான் பல்வேறு வழக்குகளையும், ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் அரசு ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக மற்றொரு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி வெளியிட உள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு | Government Staff Tamilnadu Edappadi

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கான கோப்புகள் முதல்வரிடம் ஏற்கனவே சென்றுவிட்டதாகவும், விரைவில் அதில் அவர் கையெழுத்திட உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-ஆக இருந்த நிலையில், அது கொரோனா காலத்தில் 59-ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இது 60-ஆக உயர்த்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், ஓய்வூதியம் பணப் பலன்கள் வழங்குவதிலிருந்து அரசுக்கு சுமார் ரூ. 10,000 கோடி செலவு குறையும்.