பயோ வெப்பன் அனுப்பியதா மத்திய அரசு?- நடிகை ஆயிஷா மீது தேசத்துரோக வழக்கு... நடந்தது என்ன?

india ayesha Lakshadweep bioweaapon
By Irumporai Jun 11, 2021 10:20 AM GMT
Report

யூனியன் பிரதேசமான லட்சதீவில் நிர்வாகியாக பிரஃபுல் படேலை மத்திய அரசு சமீபத்தில் நியமித்தது அன்றிலிருந்தே சர்ச்சையும் தொடங்கிவிட்டது என்றே கூறலாம் .

பதிவியேற்றவுடன் தொடங்கிய சர்ச்சை:

நியமன அதிகாரியாக பதவியேற்ற பிரஃபுல் படேல் சீர்திருத்தம் என்ற பெயரில் மாட்டு இறைச்சிக்கு தடை விதித்தார்.

மேலும் லட்சதீவில் மது பான கூடங்கள் இல்லாத நிலையில் மதுபான கூடங்களுக்கு அனுமதி வழங்கினார். பள்ளிகளில் இறைச்சிக்கு தடை விதித்து அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இதனால் கோபம் கொண்ட லட்சத்தீவு மக்கள் பிரஃபுல் பட்டேலை திரும்ப பெறக்கோரி  கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் லட்சத்தீவைச் சேர்ந்த திரைப்பட நடிகையும், இயக்குநருமான ஆயிஷா சுல்தானா ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றார்.

அதில் லட்சதீவு பிரச்சினை குறித்து பேசும் போது மத்திய அரசால் லட்சத்தீவுக்கு பயோ வெப்பன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.

ஆயிஷா சுல்தானாவின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சை குறிப்பிட்டு லட்சத்தீவு பாஜக தலைவர் அப்துல் காதர் ஹாஜி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

. தனது பேச்சு குறித்து விளக்கமளித்த ஆயிஷா,நான் நிர்வாக அதிகாரி பிரஃபுல் படேலை தான் 'பயோ வெப்பன்' என கூறினேன் . மற்றபடி நாட்டையோ, அரசாங்கத்தையோ கூறவில்லையே என கூறியுள்ளார்.