மத்திய அரசின் புதிய ஐடி விதிகள் என் உரிமைகளை பறிக்கின்றன" - பாடகர் கிருஷ்ணா!

மத்திய அரசு சமூக வலைத்தளங்களுக்கு கொண்டுவந்துள்ள புதிய தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து, பிரபல கர்நாடக இசை பாடகரான டி.எம்.கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மத்திய அரசு சமூக வலைத்தளங்களுக்கு கட்டுபாடுகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு அமல்படுத்தியது இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அந்த வகையில் மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை எதிர்த்து பிரபல கர்நாடக இசை பாடகரான டி.எம்.கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் .

அவர் மனுவில், தனியுரிமை ,கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு, மகிழ்ச்சி, உருவாக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது வாழ்க்கை.

அவை சுதந்திரமாகவும், கண்ணியத்துடனும், தான் விரும்பும் வகையில் இருக்கும் போதுதான் கிடைக்கும்போதுதான் ஒருவன் மனிதனாக உணரமுடியும்.

ஒரு கலைஞனுக்கும், அவனது படைப்பாத்மாவிற்கும் உள்ள தொடர்பே தனியுரிமை.

இந்த நிலையில்மத்திய அரசின் புதிய தணிக்கை விதிகள் ஒரு தனி மனைதனின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது.

சமூக ஊடக சேவைகளின் பயனாளராகவும், ஆன்லைன் உள்ளடக்கத்தை உருவாக்கியவர் என்ற முறையிலும் எனது உரிமைகள் பறிக்கப்படுவதாக தனது மனுவில் பாடகர் டி.எம் கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவினை விசாரித்த நீதி மன்றம் 3 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.     

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்