தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? கருத்துகணிப்பு வெளியீடு.!
டைம்ஸ்நவ் - சிவோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் திமுகதான் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று தகவல் தெரிவித்துள்ளது. தேர்தல் நெருங்கிவிட்டாலே கருத்துக்கணிப்புகள் வரத் தொடங்கிவிடும். தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளன.
இத்தேர்தலில் யார் வெற்றிப்பெறுவார்கள் என்ற கருத்துக்கணிப்பை டைம்ஸ்நவ் - சிவோட்டர்ஸ் இணைந்து நடத்தியது. தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளை வழக்கமாக வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழகத்தை பொறுத்தவரையில் திமுகதான் தமிழகத்தில் ஆட்சியை பெரும்பான்மையுடன் பிடிக்கும் என தகவல் தெரிவித்துள்ளது.

தற்போதைய கருத்துக்கணிப்பின்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 158 இடங்களையும், அதிமுக கூட்டணி 65 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும், மக்கள் நீதி மய்யம் 5 இடங்களிலும், அமமுக 3 இடங்களிலும், இதர கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றிப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் டைம்ஸ்நவ்-சிவோட்டர்ஸ் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் பா.ஜ., கூட்டணி அரசு ஆட்சியை கைப்பற்றும் என்றும், மொத்தமுள்ள 30 இடங்களில் பா.ஜ., - என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக கூட்டணி 18 இடங்களிலும், காங்., - திமுக கூட்டணி 12 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும், மேற்கு வங்கம் - திரிணமுல் காங்., - 154பா.ஜ., - 107கம்யூ., - காங்., கூட்டணி - 33 வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.