இந்திய பெருமைகளில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

R. N. Ravi
By Irumporai Jan 26, 2023 02:26 AM GMT
Report

 74 வது குடியரசு தினம் நாட்டின் 74 வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகின்றது, ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (முன்பு ராஜபாதை) குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. 

ஆளுநர் ரவி உரை

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர். என் ரவி தனது குடியரசு தின உரையில் நாட்டுக்காக உயிர் தியாக செய்த தீரமிக்க வீரர்களை நாம் இன்று நன்றியுடன் நினைவுகூர்வோம். நமது ராணுவத்திற்கு நன்றி செலுத்துவோம்.

காலத்தை வென்ற அரசியலமைப்பு வழங்கிய அம்பேத்கருக்கு நன்றி தெரிவிப்போம். ருக்மணி லட்சுமிபதி குயிலி அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துவோம்.

வஉசி, பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்துவோம். வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது. இந்திய பெருமைகளில் ஒன்றாக தமிழ் திகழ்கிறது. வாழ்க தமிழ்நாடு. வாழ்க பாரதம்" என்று குறிப்பிட்டார்.