தமிழகத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளை மூட அரசு அதிரடி உத்தரவு

covid19 school student close colleges
By Jon Mar 23, 2021 05:49 PM GMT
Report

மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை முதல் மூடப்படுகின்றன. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சத்திஸ்கர் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள் நாளை முதல் மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவதாகவும் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.