தமிழக போலீசாருக்கு வார விடுமுறை: அரசாணை வெளியானது

tamilnadu police tn police leave
By Fathima Sep 23, 2021 03:41 PM GMT
Report

தமிழ்நாடு காவல் துறையினருக்கு வார விடுமுறை, பிறந்த நாள் விடுமுறை, மிகை நேர ஊதியம் வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,

  • காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணி காக்க ஏதுவாகவும், தங்கள் குடும்பத்துடன் போதிய நேரம் செலவிடுவதற்கும் வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்.
  • வார ஓய்வு தேவைப்படவில்லை எனத் தெரிவிக்கும் காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும்.
  • காவலர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாள்களில் அவர்களது குடும்பத்துடன் கொண்டாட ஏதுவாக விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
  • பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துச்செய்தி, மாவட்ட, மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக சம்பந்தப்பட்ட காவலர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.