அரசு அதிகாரிகளிடம் ஒற்றுமை இல்லை - அமைச்சர் வேதனை
Government of Tamil Nadu
By Thahir
அதிகாரிகளிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் பணிகள் தாமதமாவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
சென்னையில் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் குறித்து ஆலோசனை இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ஆலந்தூரில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் வேதனை
அதில், பேசிய அமைச்சர் அதிகாரிகளிடம் ஒற்றுமை இல்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.
அதாவது, ஒரு பணியினை செய்வதற்கு இரண்டு மூன்று அதிகாரிகள் இணைந்தால் அந்த பணிகள் விரைவில் முடிவடையும்.
அதிகாரிகளிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் அந்த வேலை தாமதமாகி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ‘ என தெரிவித்தார்.