சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு

Tamilnadu ChennaiRains
By Irumporai Nov 07, 2021 04:32 PM GMT
Report

வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ள நிலையில், மழையினால் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக சென்னையில் தற்போது பெய்த கன மழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ளது.

அந்த வகையில், சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்களும் விடுமுறை அளிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

தனியார் நிறுவனங்கள் தற்போதைய மழை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, தங்கள் பணியாளர்களுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை அளித்தோ அல்லது வீட்டிலிருந்து பணிபுரியும் வகையிலோ ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கனமழை போன்ற சூழலை பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களே முடிவு எடுத்து செயல்பட,லாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.