இலங்கையில் இன்று முதல் அரசு அலுவலகங்கள்,பள்ளிகள் மூடல்..!

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples
By Thahir Jun 20, 2022 04:01 AM GMT
Report

இலங்கையில் இன்று முதல் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார தட்டுப்பாடு

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் கியாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இலங்கையில் இன்று முதல் அரசு அலுவலகங்கள்,பள்ளிகள் மூடல்..! | Government Office And School Closed

இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் போன்ற சிரமங்கள் ஏற்பட்டு உள்ளது.

அரசு அலுவலகங்கள் மூடல்

நாளொன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவுகிறது. இந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் அரசு அலுவலகங்களை இன்று முதல் மூட அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதேநேரம் சுகாதாரத்துறை தொடர்பான அலுவலகங்கள் இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதைப்போல பள்ளிகளும் மூடப்படுவதாக கல்வித்துறை அறிவித்து உள்ளது.

மேலும் கடுமையான மின்வெட்டும் நிலவுவதால் ஆன்லைன் வகுப்புகளையும் குறைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.