சிக்கலில் சிவசங்கர் பாபா ஜாமீன் வழங்க மறுத்த தமிழக அரசு

tamilnadu bail sivashankarbaba
By Irumporai Apr 08, 2022 04:14 AM GMT
Report

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த அதன் நிறுவனர் சிவசங்கர் பாபா கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட அவர் மீது போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் அளிக்க கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் , அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.

உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிக்கலில் சிவசங்கர் பாபா ஜாமீன் வழங்க மறுத்த தமிழக அரசு | Government Of Tamil Nadu Refuses To Grant Bail

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஜாமீன் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த சூழலில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது, அவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருக்கிறது.

ஒருவேளை ஜாமீன் அளிக்கும் பட்சத்தில் அவர் சாட்சியங்களை கலைப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு. சிவசங்கர் பாபாவினால் வழக்கு விசாரணைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.