கேரள அரசு ICU-வில் இருக்கு .. சசிதரூர் விமர்சனம்

corona kerala shashitharoor
By Irumporai Aug 26, 2021 08:09 AM GMT
Report

கேரளாவில் திருவனந்தபுரத்தில் கேரளா அரசுக்கு எதிரான இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சசிதரூர் கேரளாவில் தொற்று அதிகரிப்பு குறித்து விமர்சித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது குறைந்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.

இதனால், கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததுள்ளது, குறிப்பாக அந்த நேற்று மட்டும் கேரளாவில் 31 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியானது .

இந்த நிலையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் கேரளா அரசுக்கு எதிரான இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சசிதரூர் கேரளாவில் கொரோனா அதிகரிப்பு குறித்து விமர்சித்துள்ளார்.

அதில் கேரளா அரசு ICU-வில் உள்ளதாகவும் ஆம்புலன்சில் ஏற்றும் முன் கொரோனாவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.