மத்திய அரசிடமிருந்து வரி விலக்கு பெற்று தராவிட்டால் பெரும் தொகையை இழக்க நேரிடும்... - BCCIக்கு எச்சரிக்கை...!

Government Of India Board of Control for Cricket in India
By Nandhini Oct 14, 2022 07:02 AM GMT
Report

மத்திய அரசிடம் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் வரி விலக்கு பெற்று தராவிட்டால் பெரும் தொகையை இழக்க நேரிடும் என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரும் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.

ஆஸ்திரேலியா பயணம்

ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணி மும்மையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. நேற்றோடு பெர்த் மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி நிறைவடைந்தது.

Board of Control for Cricket in India

BCCIக்கு எச்சரிக்கை

இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இப்போட்டிக்கு ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி மத்திய அரசிடமிருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் வரி விலக்கு பெற்று தர வேண்டும். அப்படி பெற்று தராவிட்டால் பெரும் தொகையை இழக்க நேரிடும் என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், வரிவிலக்கு கிடைக்காத சூழல் ஏற்பட்டால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) மத்திய வருவாய் பகிர்விலிருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.477 கோடி முதல் ரூ.954 கோடி வரை இழக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.