அரசு ஆண் ஊழியர்கள் தாடி வளர்க்காமல் அலுவலகத்திற்கு வரக்கூடாது - தாலிபான் அரசு உத்தரவு

Beard government-male-employees Taliban-government-order அரசு-ஆண்-ஊழியர்கள் தாடி தாலிபான்-அரசு-உத்தரவு
By Nandhini Apr 02, 2022 05:30 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

ஆட்சி கைமாறியவுடன் அதிகார மட்டத்திலும் அதிரடி மாற்றங்களை தலிபான்கள் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி விமானத்தில் தப்பிச் சென்று விட்டார். இதனால், அச்சமடைந்த ஆப்கானிஸ்தானியர்களோ போக இடமில்லாமலும், நரகத்துக்குள் நுழைவதற்கு மனம் இல்லாமல் வாழ தயாரானார்கள்.

பெண்களை கட்டாய திருமணம் செய்து அடிமையாக்கும் முயற்சி துவங்கி இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

மத கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்றும் இந்த அமைப்பினர், பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள். இந்த அமைப்பினர் திருமணம் என்ற பெயரில் பெண்களை அடிமைப்படுத்த தாலிபான்கள் துவங்கியுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அரசு அலுவலகங்களில் வேலை செய்யும் ஆண் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தாடி வளர்க்க வேண்டும் என்று தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், தாடி வளர்க்காதவர்கள் அலுவலங்களுக்கு வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.  

அரசு ஆண் ஊழியர்கள் தாடி வளர்க்காமல் அலுவலகத்திற்கு வரக்கூடாது - தாலிபான் அரசு உத்தரவு | Government Male Employees Beard Taliban Order