மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலை.. முதல்வரின் அறிவிப்பு உறங்குகிறது - அன்புமணி!

Anbumani Ramadoss M K Stalin Tamil nadu PMK
By Swetha Dec 02, 2024 03:49 AM GMT
Report

மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலை கொடுங்கள் என அன்புமணி.

அன்புமணி

இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அன்புமணி ராம்தாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பார்லிமென்டில், 2016-ல் நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின்படி,

மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலை.. முதல்வரின் அறிவிப்பு உறங்குகிறது - அன்புமணி! | Government Jobs For Handicapped Says Anbumani

தமிழகத்தில் 2017ல் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு, 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனாலும், தமிழக அரசு துறைகளில், குறைந்த எண்ணிக்கையிலான பணிகளே மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றை மறு ஆய்வு செய்து, கூடுதல் பணிகளை ஒதுக்க வேண்டும்.

லஞ்சப்பணத்துடன் சிக்கியவருக்கு பதவி உயர்வா? தமிழக அரசை விளாசும் அன்புமணி ராமதாஸ்

லஞ்சப்பணத்துடன் சிக்கியவருக்கு பதவி உயர்வா? தமிழக அரசை விளாசும் அன்புமணி ராமதாஸ்

அரசு வேலை.. 

கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், ஒவ்வொரு துறையிலும் உள்ள பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அடுத்த ஓராண்டுக்குள் சிறப்பு ஆள் தேர்வின் வாயிலாக, அவை நிரப்பப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலை.. முதல்வரின் அறிவிப்பு உறங்குகிறது - அன்புமணி! | Government Jobs For Handicapped Says Anbumani

அரசு துறைகளில், இரு ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு விதிகளை தளர்த்தி, முன்னுரிமை அடிப்படையில் நிலையான பணி வழங்கப்படும் என, அரசாணையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், முதல்வரின் அறிவிப்பும், அரசாணையும், கோப்புகளில் உறங்குகின்றன.

தமிழக அரசு நினைத்தால், மிக எளிதாக சிறப்பு ஆள் தேர்வுகளை நடத்தி, மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை வழங்கி இருக்கலாம். இனியாவது அதை செய்ய வேண்டும். நடப்பு நிதியாண்டுக்குள், அனைத்து பின்னடைவு பணியிடங்களையும் நிரப்பி, மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நீதி வழங்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.