அரசு பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் அரசு வேலை- அதிரடியாய் அறிவித்த சீமான்
சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து வழக்கம்போல் அதிரடி காட்டியுள்ளது நாம் தமிழர் கட்சி. 117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் போட்டியிட உள்ளனர். அனைவரையும் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் அறிமுகம் செய்தார்.
இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். அறிமுக கூட்டத்திற்கு பிறகு சீமான், தனது தொகுதியில் முதல் நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், அனல்மின் நிலையத்தை உருவாக்கி சாம்பலை தூவி வாழ்வாதாரத்தை அழித்து, வாழும் இடத்தை சாம்பலாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த தொகுதியில், காட்டுப்பள்ளியில் 6 ஆயிரம் ஏக்கர் இடத்தை அதானி என்னும் ஒற்றை முதலாளிக்கு கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக சமரசம் இல்லாமல் சண்ட செய்ய துணிந்து நிற்கும் பிரபாகரனின் தம்பி உங்களை நம்பி திருவொற்றியூர் தொகுதியை தேர்ந்தெடுத்து போட்டியிடுகிறேன்.
எனக்கு வாய்ப்பளிங்கள்.
நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால், தரமான இலவசக் கல்வியை அளிப்போம். அரசுப்பள்ளியில் பயிலும் அனைவருக்கும் அரசு வேலை என்ற நிலையை உருவாக்குவேன். இலவசங்களையம் கவர்ச்சித் திட்டங்களையும் கூறி மக்களை ஏமாற்ற நான் தயாராக இல்லை என்றார்.