டாஸ்மாக் வருமானத்தில் அரசு செயல்படவில்லை - தமிழக அரசு விளக்கம்!

Government of Tamil Nadu
By Thahir Nov 24, 2023 05:04 PM GMT
Report

டாஸ்மாக் வருமானத்தில் அரசு செயல்படவில்லை என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் வழக்கு

சர்வதேச கருத்தரங்குகளில் மதுபானம் விநியோகிக்கும் வகையில், சிறப்பு உரிமம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு வழக்கு தொடர்ந்திருந்தார்.

டாஸ்மாக் வருமானத்தில் அரசு செயல்படவில்லை - தமிழக அரசு விளக்கம்! | Government Is Not Working On Tasmac Income

இந்த வழக்கு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி பரதசகக்ரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் சண்முக சுந்தரம் அவர்கள் ஆஜராகி விளக்கமளித்தார். அவர் கூறுகையில், விளையாட்டு மைதானங்களில், போட்டி நடக்கும் இடங்களில் மதுபானம் விநியோகிக்கப்படாது.

தமிழக அரசு விளக்கம்

அப்போது மனுதாரர் தரப்பில் குறிப்பிட்ட என்.எல்.ராஜா, மதுவிலக்கு சட்டப்படி பொது இடங்களில் மது அருந்துவது குற்றம் எனவும், விளையாட்டு மைதானங்கள், பொது அரங்குகளில் மதுபானம் விநியோகிக்க கூடாது என்கிறார்.

அதன்பின் பேசிய தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முக சுந்தரம், டாஸ்மாக் வருமானத்தில் அரசு செயல்படவில்லை என விளக்கமளித்தார். இதுகுறித்து அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை டிச.15-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்கள்