ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்: பெண்களுக்கு ஓர் இனிப்பான செய்தி
அரசாங்கத்தின் "லக்பதி தீதி யோஜனா" பெண்களை பொருளாதார ரீதியாக முன்னேற ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
"லக்பதி தீதி யோஜனா"
அரசாங்கத்தின் "லக்பதி தீதி யோஜனா" பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக பெண்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வட்டி இல்லாத கடன் கொடுக்கப்படுகின்றது.
தற்போது இருக்கும் பெண்கள் சமையலை வீடு என்று தங்கள் வாழ்க்கையை கழிப்பவர்கள் இல்லை சிறு தொழில்கள் செய்து ஆண்களுககு சமமாக முன்னேறி வருகின்றனர்.

பெண்களின் இந்த முயற்ச்சியை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசு "லக்பதி தீதி யோஜனா"வை செயல்படுத்துகிறது. இதன் மூலம் நிதி பற்றாக்குறையால் சொந்தமாக தொழில் தொடங்க முடியாத பெண்களின் கனவுகளை இந்த திட்டம் மூலம் நிறைவேற்றலாம்.
லக்பதி தீதி திட்டத்தின் அம்சம் , இது ரூ.5 லட்சம் வரை வட்டி இல்லாத கடன்களை வழங்குகிறது. வங்கிக் கடன்கள் பொதுவாக அதிக வட்டி விகிதங்களுடன் வரும்.
ஆனால் இந்தத் திட்டத்தின் கீழ், முழு வட்டி செலவையும் அரசாங்கமே ஏற்கிறது. இது பெண்கள் தங்கள் தொழில்களை நிறுவவும், லாபம் ஈட்டவும் உதவுகிறது.

இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் சில எளிய தகுதி அளவுகோல்களை வகுத்துள்ளது. விண்ணப்பதாரர் பெண்கள் ஒரு செயலில் உள்ள சுய உதவிக் குழுவில் (SHG) இணைந்திருக்க வேண்டும்.
18 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையலாம். கடனை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பெண்கள் தங்கள் திறன்களை வெற்றிகரமான வணிகங்களாக மாற்றுவதற்காக அரசாங்கம் இலவச வணிகப் பயிற்சியையும் வழங்கும்.
இந்த உதவியைப் பயன்படுத்தி கைவினைப்பொருட்கள், ஊறுகாய்-அப்பளம் தொழில்கள், தையல், பால், காளான் வளர்ப்பு அல்லது வேறு எந்த சேவைத் துறையையும் தொடங்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாற, பெண்கள் தங்கள் தொகுதி அல்லது மாவட்ட சுயஉதவிக் குழு அலுவலகத்திற்கு செல்லலாம். ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் போர்டல் ஆன்லைன் விண்ணப்பங்களையும் வழங்குகிறது.
விண்ணப்பிக்கும் போது, நீங்கள் தொடங்க விரும்பும் வணிக வகையை விவரிக்கும் ஒரு சுருக்கமான வேலைத் திட்டத்தை அலுவலகத்தில் சமர்பித்தால் போதும்.